தற்போதைய செய்திகள்

"இப்படி பண்ணா அதிக மார்க் போடுவேன்"... மாணவிகளுக்கு ஹெட்மாஸ்டர் ஆபாச மெசேஜ் - புரட்டி எடுத்த பெற்றோர்கள் - பரபரப்பு காட்சி

தந்தி டிவி

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் பி.கே. அங்கடி. இவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு மாணவிகளுக்கு ஆபாச செய்திகள் மற்றும் புகைப்படடங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், சில மாணவிகளிடம் தான் கூறும்படி நடந்து கொண்டால் அதிக மதிப்பெண் எடுக்க வைப்பேன் எனவும், இல்லையென்றால் குறைந்த மதிப்பெண் தான் வரும் எனவும் கூறி மிரட்டியுள்ளார். இது குறித்து தங்களின் பெற்றோரிடம் மாணவிகள் புகாரளித்த நிலையில், பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் தலைமையாசிரியரை சரமாரியாக தாக்கி போலீசில் பிடித்து கொடுத்தனர். இதில், மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் புகாரை வைத்து தலைமையாசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்