தற்போதைய செய்திகள்

"சத்தம் போடாதே" பிரம்பாலே மாணவர்களை வெளுத்த ஹெட்மாஸ்டர்..உடல் முழுதும் வீக்கம் - கொந்தளித்த பெற்றோர்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை கொடூரமாக பெரம்பால் தாக்கிய தலைமை ஆசிரியை மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்புத்துறை பாளையத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். மாணவர்கள் வகுப்பறையில் சத்தமாக மாணவர்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த தலைமை ஆசிரியை மணிமொழி சத்தம் போடாதே என்று கூறி, பிரம்பால் கைகள் வயிறு முதுகு நெஞ்சு பகுதிகளில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் இருவருக்கும் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து பெற்றோர்கள் தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இந்த நிலையில் வட்டாட்சியர் ஜெகஜோதி மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அடித்த ஆசிரியையின் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும் என பெற்றோர்களிடம் உறுதி அளித்தார்.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்