தற்போதைய செய்திகள்

அசுர வேகத்தில் மோதிய கார்.. சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி பலி - காரை சோதித்து ஷாக்கான போலீஸ்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி கார் மோதி உயிரிழந்த சம்பவத்தில், காரில் இருந்து 500 கிலோ குட்கா கைப்பற்றப்பட்ட நிலையில் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அருகே தென்தெராசலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை.

இவர் தன் மனைவி மலருடன் கள்ளக்குறிச்சி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இவர்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், காரில் 500 கிலோ குட்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் முத்துலிங்கத்தை கைது செய்த போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.    

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு