தற்போதைய செய்திகள்

வெற்றி பெறுவது போல் வந்து தோல்வி.. ஜஸ்ட் மிஸ்ஸில் காலியான KL ராகுல் அணி..!

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் 30வது போட்டியில் லக்னோ, குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத், 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 66 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியில், கே.எல். ராகுல் அரை சதமடித்தார். ஒரு கட்டத்தில் லக்னோவின் வெற்றிக்கு 36 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால், அந்த அணி எளிதில் வெல்லும் என கருதப்பட்டது. ஆனால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய மோகித் சர்மா, கே.எல் ராகுல் மற்றும் ஸ்டோனிஸின் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் பதோனியும் ஹூடாவும் ரன் அவுட் ஆயினர். இதனால் கடைசி ஓவரில் லக்னோ 4 ரன்கள் மட்டுமே எடுக்க, 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்