தற்போதைய செய்திகள்

குஜராத் மாணவி பாலியல் பலாத்கார வழக்கு - கைதான காஞ்சிபுரம் மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் | Madurai HC

தந்தி டிவி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர், மதுரையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் குறித்த கருத்தரங்கில் பங்கேற்றார். தெப்பக்குளம் பகுதியில் உள்ள தங்குவிடுதி ஒன்றில் தங்கினார். இந்நிலையில், அதே விடுதியில் தங்கிய சென்னை பெரம்பூரை சேர்ந்த அஷீஷ் ஜெயின், காஞ்சிபுரம் மாடவாக்கத்தை சேர்ந்த ஜெரோம் கதிரவன் ஆகியோர் தன்னை பலாத்காரம் செய்ததாக, குஜராத் சென்ற பின்பு ஆன்லைனில் அந்த மாணவி புகார் தெரிவித்தார். இதையடுத்து 2 மாணவர்களையும் மதுரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் சிறையில் உள்ள ஜெரோம் கதிரவன், தனக்கு ஜாமீன் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தாரணி முன்பு விசாரணைக்கு வந்தது. பொய்யான புகார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்த நீதிபதி, ஜெரோம் கதிரவனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார். மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் இருவேளை கையெத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்