தற்போதைய செய்திகள்

குஜராத், ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை - ஆட்சியை தக்க வைக்குமா பா.ஜக?

தந்தி டிவி

குஜராத், ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை - ஆட்சியை தக்க வைக்குமா பா.ஜக?

குஜராத், ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

பாஜக ஆட்சி செய்யும் ஹிமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 76.44 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. மாநிலத்தில் 59 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இரு கட்டங்களாக நடைபெற்ற குஜராத்தில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகின. குஜராத்திலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 37 மையங்களில் எண்ணப்படுகிறது. இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்கள் முழுவதும் பாதுகாப்பு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்