தற்போதைய செய்திகள்

72 வயது முதியவருக்கு காதணி விழா நடத்திய பேரன், பேத்திகள் - நாமக்கல்லில் நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

72 வயது முதியவருக்கு காதணி விழா நடத்திய பேரன், பேத்திகள் - நாமக்கல்லில் நெகிழ்ச்சி சம்பவம்

நாமக்கல் அருகே 72 வயது முதியவருக்கு உறவினர்கள் ஒன்றுகூடி, காதணி விழா நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த வரதராஜன் என்ற 72 வயது முதியவர், மனைவி இறந்துவிட்ட நிலையில் மகன் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் முதியவர் வரதராஜனுக்கு சிறுவயதில் காதணி விழா நடைபெறாததை அறிந்த உறவினர்கள், அவருக்கு காதணி விழா நடத்தினர்.

நெருங்கிய உறவினர்கள், பேரன், பேத்திகள் என அனைவரும் ஒன்றுகூடி முதியவரின் காதணி விழாவில் கலந்து கொண்டு, அவருக்கு சீர் கொடுத்து மகிழ்ந்தனர்.

முதியவருக்கு பேரன் பேத்திகள் காதணி விழா நடத்திய நிகழ்ச்சி, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ