தற்போதைய செய்திகள்

சென்னையில் பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா - அதிர்ச்சியில் பெற்றோர்

தந்தி டிவி

உறவுக்கார சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக முதியவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மேல்விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் வசிக்கும் சென்னையைச் சேர்ந்த தம்பதியர், தங்கள் மகளுடன் விடுமுறைக்காக கடந்த 2012ம் ஆண்டு சென்னை வந்தனர். விடுமுறை முடித்து லண்டன் திரும்பிய பின், தங்கள் குழந்தை பள்ளியில் இயல்புக்கு மாறாக நடந்து கொண்டதால் கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போது, சென்னையில் 67 வயதாகும் தாத்தா உறவுமுறையில் உள்ள உறவினரால் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரிய வந்தது. இதையடுத்து, தாயகம் வந்த சிறுமியின் பெற்றோர், சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முதியவருக்கு எதிராக புகார் அளித்தனர்.

முதியவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேல்விசாரணைக்கு உத்தரவிடக்கோரி முதியவர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, லண்டனில் வழக்கு தொடர்பாக உள்ள ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை பெற வேண்டியுள்ளதாகக் கூறி, வழக்கில் மேல் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை