தற்போதைய செய்திகள்

பெங்களூருவில் பிரமாண்ட பதவியேற்பு விழா - 6 மாநில முதல்வர்களுக்கு காங். இன்வைட்

தந்தி டிவி

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 6 முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்கின்றனர். இதற்கான பதவியேற்பு விழா பெங்களூரு ஸ்ரீகண்டீரவ ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருகை தருமாறு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஹிமாச்சல் முதல்வர் சுக்வீந்தர்சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளனர். இதுதவிர பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை மாலை பெங்களூர் செல்ல உள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே