தற்போதைய செய்திகள்

"எங்க ஜாதி தனியா உட்கார வைப்பாங்க அவங்க ஜாதி தனியா உட்கார வைப்பாங்க" - அரசு பள்ளியில் அரங்கேறிய சாதி கொடுமை

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு பள்ளியில் சாதி பாகுப்பாடு காட்டுவதால், 2வது நாளாக பள்ளிக்கு செல்வதை மாணவ, மாணவிகள் புறக்கணித்தனர்.

தத்தைமஞ்சி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் பழங்குடியின மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை பழங்குடியின மாணவர்களிடம் சாதி பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், 2வது நாளாக மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவதை பெற்றோர் புறக்கணித்தனர். தகவலறிந்து கிராமத்திற்கு சென்ற சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும், பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது தங்களிடம் ஆசிரியர்கள் சாதி பாகுப்பாடு காட்டுவதாகவும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் புறக்கணிப்பதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர். பின்னர், மாணவர்களை பள்ளிக்கு வருமாறு கேட்டு கொண்ட சார் ஆட்சியர், தலைமை ஆசிரியை மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்