தற்போதைய செய்திகள்

"மக்களுக்கு எது நன்மை என்பதை அறிந்து ஆளுநர் செயல்பட வேண்டும்" - மத்திய அமைச்சர் வி.கே.சிங்

தந்தி டிவி

மக்களுக்கு என்ன நன்மை பயக்கும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என தமிழக ஆளுநரை வலியுறுத்துவோம் என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக கேள்வி எழுப்ப‌ப்பட்டது. அதற்கு பதில் அளித்த வி.கே.சிங், தமிழக அரசு செயல்பாடுகளை தலையிட விரும்பவில்லை என்றும், மக்களுக்கு என்ன நன்மை பயக்கும் என்பதை அறிந்து செயல்பட ஆளுநரை அறிவித்துவோம் என்றும் தெரிவித்தார். மேலும், காரைக்குடி கானாடுகாத்தானில் பயன்பாடு இன்றி கிடைக்கும் விமான நிலையம் குறித்தில் விமான நிலையங்கள் செயல்பட முன்வந்தால் மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்றார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்