தற்போதைய செய்திகள்

"மாதத்தின் முதல் வேலை நாளில் அரசு ஊழியர்கள் இதை செய்ய வேண்டும்..." - புதுவை அரசு உத்தரவு

தந்தி டிவி

புதுச்சேரி அரசு ஊழியர்களை மாதத்தின் முதல் வேலைநாளில், காதி அல்லது கைத்தறி ஆடை அணிய வேண்டும் என, அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஹிரண் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில், அரசு ஊழியர்கள் பாரம்பரிய காதி அல்லது கைத்தறி துணி அணியலாம் என, துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் மாதந்தோறும் 15-ஆம் தேதியன்று, அரசு உயர் அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி

Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை

Vilathikulam Girl Murder Case Update | கைதானார் - விளாத்திகுளம் மாணவி கொலையில் பெரும் திருப்பம்