தற்போதைய செய்திகள்

விபத்தை பொய்யாக சித்தரித்த வழக்கு - "அரசு வழக்கறிஞர் குற்றவாளி" நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தந்தி டிவி
• காங்கேயம் அருகே மரத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். • ஆனால், லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக சித்தரித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். • மேலும், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. • இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரித்தபோது, பொய் வழக்கு என தெரியவந்தால், வழக்குப் பதிவு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், வழக்கறிஞர் தங்கமணி, லாரி டிரைவர் மாணிக்கம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். • விசாரணை காலத்தில் இன்ஸ்பெக்டர் சுகுமார் இறந்துவிட்ட நிலையில், லாரி டிரைவர் மாணிக்கம், வழக்கறிஞர் தங்கமணிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. • இந்த தண்டனையை எதிர்த்து, அவர்கள் இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்களின் தண்டனையை உறுதிசெய்தது. • இதையடுத்து, அரசு வழக்கறிஞர் பதவியை தங்கமணி ராஜிநாமா செய்து, திருப்பூர் ஆட்சியரிடம் கடிதத்தை கொடுத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்