தற்போதைய செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு குட் நியூஸ்! -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டத்திற்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட 3 வகையான சிறப்பு உதவித்தொகைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் இத்திட்டங்கள் மூலம் பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று முதல் வரும் 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விளையாட்டு வீரர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்தாண்டு இறுதியில் இத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், அதன்பின்னர் பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் பெற்ற வெற்றியின் விவரங்களை, Registration ID மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்