தற்போதைய செய்திகள்

"வாரத்தின் நல்ல நாள் வெள்ளிக்கிழமை?" - கின்னஸ் அமைப்பின் பரபரப்பு ட்வீட்

தந்தி டிவி

வாரத்தின் நல்ல நாள், மோசமான நாள் குறித்து கின்னஸ் அமைப்பின் ட்விட்டர் கருத்து, சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த திங்களன்று, டுவிட்டரில், கின்னஸ் அமைப்பானது, வாரத்தில் மோசமான நாள் திங்கள்கிழமை என பதிவிட்டது. சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 4.56 லட்சம் பேர் அதற்கு விருப்பமிட்டு இருந்தனர். 83.6 ஆயிரம் பேர் மறு ட்விட் செய்திருந்தனர். வாரக் கடைசியில் நன்றாக ஓய்வெடுத்துவிட்டு, திங்களன்று அன்றாட சுறுசுறுப்புடன் வேலையைத் தொடங்கும் நிலையில் பெரும்பாலானோர் இருப்பதில்லை என்றும், எனவே வாரத்தின் மோசமான நாள் திங்கள் என்றும் பரவலாக எண்ணப்படுகிறது. அதையே கின்னஸ் அமைப்பின் ட்விட்டும் எதிரொலித்தது. இந்நிலையில், கின்னஸ் பதிந்த இன்னொரு ட்விட்டில், நல்ல நாளாக வெள்ளிக்கிழமை இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கும் ஏராளமானோர் லைக்குகளை தெரிவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்