தற்போதைய செய்திகள்

காதலன் வீட்டை சூறையாடிய காதலி பெற்றோர்.. அதிர்ச்சி காட்சி - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கூகையூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன்- இந்திரா தம்பதியின் மகன் ரமேஷ், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். • கடந்த 2 ஆண்டுகளாக கூகையூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகள் தீபாவை காதலித்தார். • இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். • தீபா, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்வதால் அவருடன் ரமேஷ் சென்றதாக கூறப்படுகிறது. • இதற்கிடையே, ஆத்திரமடைந்த தீபாவின் குடும்பத்தினர், ரமேஷின் வீடு புகுந்து பொருட்களை சூறையாடினர். • மேலும், ரமேஷின் பெற்றோர் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. • இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். • மேலும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரமேஷின் பெற்றோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்