தற்போதைய செய்திகள்

பல ஆண்களுடன் தொடர்பிலிருந்த காதலி...ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை...

தந்தி டிவி

கொல்லப்பட்டவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சிராவனி... ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தசூழலில்தான் விசாகப்பட்டினத்தில் உள்ள செருப்பு கடையில் சிராவனி வேலை செய்து வந்துள்ளார். அப்போது கோபால் என்பவரோடு சிராவனிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சிங்கிள் என்பதால் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. சிராவனியும் கோபாலும் தனியே வீடு எடுத்து தங்கி திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

காதலியுடன் நெருங்கி பழகியபோதுதான் கோபாலுக்கு சிராவனியின் மொத்த சுயரூபமும் தெரியவந்துள்ளது. ஆம், சிராவனிக்கு பல ஆண்களுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட ஒரு ஆண் நண்பருடன் மட்டும் அடிக்கடி chat செய்வது மீட் பண்ணுவதென சிராவனி நெருங்கி பழகிவந்துள்ளார்.இந்த விவகாரம் ஒருகட்டத்தில் கோபாலுக்கு தெரியவந்துள்ளது. ஆண் நண்பர்களுடன் பேசுவதை கைவிடுமாறு சிராவனியை கண்டித்திருக்கிரார். ஆனால் சிராவனி காதலன் பேச்சை கொஞ்சம்கூட காதில் போட்டுகொள்ளவில்லை...

காதலியின் இந்த சொல் பேச்சை கேளாத தனம் கோபாலுக்கு ஆத்திரத்தை வரவழைத்திருக்கிறது. சம்பத்தன்று சிராவனியை பீச்சுக்கு அழைத்து சென்று சமாதானம் பேசியிருக்கிறார். அப்போது காதலர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியிருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கோபால் கடற்கரையிலேயே வைத்து சிராவனி கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்பு தாமாகவே காவல் நிலையம் சென்று போலிசிடம் கோபால் சரணடைந்திருக்கிறார்... இந்த கொலை சம்பவம் குறித்து கோபாலை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை