தற்போதைய செய்திகள்

மோட்டர் ரூமில் காயங்களுடன் கிடந்த சிறுமி சித்தி ரூபத்தில் வந்த "பேயால்" நேர்ந்த கொடூரம்..!

தந்தி டிவி

தாராபுரம் அடுத்த பொன்னாவரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில், தனது மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்திருக்கிறார். இதையடுத்து, ஏற்கெனவே திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்த கீர்த்தனா என்பவரை ரமேஷ் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதில், இருவரும் தங்களின் முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், ரமேஷின் 9 வயது சிறுமியை கீர்த்தனா அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மோட்டாா் அறையில் சிறுமி 3 மணி நேரமாக தஞ்சம் அடைந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை போலீசார் கண்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்