தற்போதைய செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம்பிடித்த பெண்...காதலனை தாக்கி பெண்ணை இழுத்துச் சென்ற குடும்பத்தினர்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கேசவனேரியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரகாஷ். தொழிற்கல்வி படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

வள்ளியூர் அருகேயுள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை, பிரகாஷ் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.

காதல் சுபத்தில் முடிந்த சந்தோஷத்தில், எதிர்கால சிந்தனைகளுடன் இருந்த இந்த ஜோடிக்கு, திருஷ்டி விழுந்ததுபோல் நிகழ்ந்தது ஒரு சம்பவம்... 2 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் பிரகாஷ் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்துள்ளார். அப்போது துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்த சாலை விபத்தில், பிரகாஷின் இரு கால்களும் செயலிழந்தன.

காதலனுக்கு தானே உடலில் காயம். காதலுக்கு இல்லையே என்பதில் உறுதியாக இருந்த திவ்யா, கட்டினால் பிரகாஷை தான் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

ஆனால் ஆரம்பத்தில் காதலுக்கு சம்மதம் தெரிவித்த திவ்யாவின் பெற்றோர் பிரகாஷ் உடல் குறையை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் தன் காதலில் திடமாக இருந்த திவ்யா, ஒரு கட்டத்தில் கடந்த 20ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

பின்னர் பிரகாஷின் உறவினர்கள் முன்னிலையில் தன் காதலனை திருமணமும் செய்துள்ளார் திவ்யா.. இதனால் கொதித்து போன திவ்யாவின் பெற்றோர் பிரகாஷ் தங்கள் மகளை கடத்திச் சென்றதாக போலீசில் புகார் அளித்தனர்.

பின்னர் நேராக பிரகாஷின் வீட்டிற்கு சென்ற திவ்யா தரப்பு, நடக்க முடியாத நிலையில் இருந்த பிரகா​ஷை, சரமாரியாக தாக்கியது. வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியதுடன், திவ்யாவை அங்கிருந்து தரதரவென இழுத்துச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த பிரகாஷை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் காதல் மனைவியின் நிலை என்னவானது என்பதை நினைத்து பதறிப்போன பிரகாஷ் நேராக வள்ளியூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னை தேடி வந்து திருமணம் செய்து கொண்ட திவ்யாவை பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் என்பதே அவரின் கோரிக்கை

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை