தற்போதைய செய்திகள்

சீட்டாக்களை பாதுகாக்க களமிறங்க போகும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள்

தந்தி டிவி

மத்திய பிரதேசத்தில் சீட்டாக்களை வேட்டையாடலில் இருந்து பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு படை களமிறக்கப்படுகிறது.

நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட சீட்டாக்கள் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளது.

இவைகளை வேட்டையிலிருந்து பாதுகாக்கும் வகையில் சூப்பர் மோப்பநாய் படை களமிறக்கப்படுகிறது.

இதற்காக அரியானாவில் இந்தோ - திபெத்தின் எல்லைப் பாதுகாப்பு படையின் நாய்கள் பயிற்சி முகாமில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

சிறுத்தையின் தோல்கள், எலும்புகள், யானை தந்தங்கள் மற்றும் பிற உடல் பாகங்களை அடையாளம் காணவும், கண்காணிப்பு போன்ற திறன்களை கற்றுக்கொள்ளவும் நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது .

7 மாத கடின பயிற்சிக்கு பின்னர் ஏப்ரலில் இந்த சிறப்பு படை பாதுகாப்பு பணியில் களமிறங்கும் என தெரிவிக்கிறார்கள்.

CPI |CPM | Byelection |இடைத்தேர்தலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கூட்டணி..இது யாருமே யோசிக்காத ஆங்கிள்

TN Byelection| CPI, CPM சேர்ந்து எடுத்த முடிவு.. இடைத்தேர்தலில்தமிழகமே எதிர்பாரா மெகா திருப்பம்

By-Election | Congress | TVK | Alliance | 2 தொகுதி இடைத்தேர்தல்..காங்கிரஸின் அதிரடி மூவ்

CJP | Abhijeet Dipke | Mohan Yadav| "முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்"புயலை கிளப்பிய அபிஜித்

TNEB | Electricity | மின் தடை - அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய மின்சாரா வாரியம்