தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து LED டி.வி-யை நேக்கா திருடிய கும்பல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

கோவை அருகே, பட்டப் பகலில் வீடு புகுந்து, எல்இடி டிவி மற்றும் 3 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர், உறவினரை பார்க்க குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த எல்இடி டிவி, லேப்டாப், 3 சவரன் தங்க நகை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 3 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில், கணேசன், தினேஷ், சுப்பிரமணி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எல்இடி டிவி மற்றும் 3 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்