தற்போதைய செய்திகள்

2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை கண்டுபிடித்து உறவினரிடம் ஒப்படைத்த போலீசார்... குவியும் பாராட்டு

தந்தி டிவி

தூத்துக்குடியில் 2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவரை கண்டுபிடித்து, உறவினரிடம் ஒப்படைத்த போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

https://youtu.be/cDNhqeGEJLEதூத்துக்குடியில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை ஆய்வு செய்து அவர்களை கண்டுபிடிக்க, குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதள பிரிவின் மூலம் விசாரணை நடைபெற்றது. முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நாசரேத்தில் உள்ள

மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தில், 2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன, சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை மீட்ட போலீசார், அவரது சகோதரியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். காணாமல் போனவரை கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்