தற்போதைய செய்திகள்

பல முறை விளையாடிய கால்பந்து மைதானத்தில் வைக்கப்படவுள்ள பீலே உடல் | pele | thanthi tv

தந்தி டிவி

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 82. அவரது இறுதிச் சடங்கு பிரேசிலில் அவரது சொந்த ஊரான சாண்டோஸில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பீலேவின் இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெறும் எனவும், 24 மணி நேரமும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவரது உடல் சாண்டோசிலேயே புதைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல முறை பீலேவின் மாயாஜால விளையாட்டை கண்டு ரசிகர்கள் ஆர்பரித்த அதே சாண்டோசின் விலா பெல்மிரோ கால்பந்து மைதானத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..