தற்போதைய செய்திகள்

"கால் இல்லாத மனுஷன் நா...என்னைய தூக்கி வெளியே போட்டுடாங்க..." - டீக்கடை நடத்தி வந்த முதியவர் கதறும் காட்சிகள்

தந்தி டிவி

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் சாலையோரம் மாற்றுத்திறனாளி முதியவர் நடத்தி வரும் டீக்கடையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது. 35 வருடங்களுக்கு மேலாக கணேசன் என்ற மாற்றுத்திறனாளி முதியவர் ஜிஎஸ்டி சாலையிலிருந்து மாநகராட்சி மண்டல அலுவலகம் செல்லும் சாலையோரம் டீக்கடை நடத்தி வரும் நிலையில், அதை அதிகாரிகள் அகற்ற முயன்றனர். ஆனால் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதால் அகற்றக்கூடாது என கணேசன் தரப்பினர் தெரிவிக்கவே, இருதரப்பிற்கும் வாக்குவாதம் எழுந்தது. பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அதிகாரிகள் கடையை அகற்றாமல் கணேசனுக்கு கால அவகாசம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்