தற்போதைய செய்திகள்

சான்வெட்ஜ் சாப்பிட்டதால் உணவு ஒவ்வாமை -பாதிக்கப்பட்ட 3 சிறுவர்கள் -நேரில் நலம் விசாரித்த அமைச்சர்

தந்தி டிவி

ராணிப்பேட்டையில் சான்வெட்ஜ் சாப்பிட்டு உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மூன்று சிறுவர்களை அமைச்சர் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பேக்கரியில் சைமன், ரூபன் மற்றும் ஜான்சன் ஆகிய மூன்று பேரும் சாண்வெட்ஜ் சாப்பிட்டனர். சாண்வெட்ஜ் சாப்பிட்ட சற்று நேரத்தில் திடீரென மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினர். வீடு திரும்பிய 3 சிறுவர்களையும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி அவர்களது இல்லத்திற்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுபோன்று தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுவரின் தந்தை கோரிக்கை விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்