தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம் - எகிற போகும் மீன் விலை..!

தந்தி டிவி
• தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், மீன்கள் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. • கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில், தமிழகத்தில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. • ஜூன் 14ஆம் தேதி வரை, 61 நாட்களுக்கு கடலுக்குள் படகுகள் செல்ல அனுமதிக்கப்படாது. • இதனால் சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 18 மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும். • அதேபோல புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்