தற்போதைய செய்திகள்

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்க​ள் - மீன்வரத்து குறைவால் ஏமாற்றம்

தந்தி டிவி

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய அளவுக்கு மீன்கள் கிடைக்காததால் நஷ்டத்துடன் திரும்பினர். மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். போதிய அளவு மீன் வரத்து கிடைக்காததால் மிகுந்த கவலை அடைந்தனர். ஒரு படகிற்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நடுக்கடலில் காற்று நான்கு திசைகளிலும் மாறி மாறி வீசியதால் மீன் வரத்து குறைவாக இருந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR