தற்போதைய செய்திகள்

மிகவும் எதிர்பார்த்த முதல் டெஸ்ட் போட்டி... மிரட்டிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் - 177 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா

தந்தி டிவி

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாய் அமைந்தது.

உஸ்மான் காவாஜா, டேவிட் வார்னர் ஆகியோர் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

மார்னஸ் லபுஷேன் ஸ்டீவன் ஸ்மித் கொஞ்சம் தாக்குபிடித்து ஆடினர்.

எனினும் ஜடேஜா, அஸ்வின் சுழற்பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்டீவன் ஸ்மித் 37 ரன்களிலும், லபுஷேன் 49 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

பின்னர் வந்த வீரர்களும் அஸ்வின் - ஜடேஜா கூட்டணியின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 177 ரன்களில் முடிவுக்கு வந்தது.

இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்தது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு