தற்போதைய செய்திகள்

கோயில் கறி விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு - மதுரையில் பரபரப்பு

தந்தி டிவி

மதுரையில், கறி விருந்தின்போது ஏற்பட்ட தகராறின்போது, துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில், ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார்.

திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தனசேகரன் என்பவர், திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில், கறி விருந்து வைத்துள்ளார்.

அப்போது அழைப்பின் பேரில், ரியல் எஸ்டேட் தொழில் நண்பர்கள் 50க்கும் மேற்பட்டோர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

விருந்துக்கு வந்தவர்களில் சிலர், மது அருந்தியபோது, ரியல் எஸ்டேட் அதிபர்களான வேதகிரி மற்றும் திருமங்கலத்தைச சேர்ந்த கணபதி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த வேதகிரி, தனது காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுடவே, அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தலைமறைவான வேதகிரியை கைது செய்தனர்.

இதுதொடர்பான விசாரணையில், துப்பாக்கி வைத்திருந்ததற்கான ஆவணங்கள் இருந்த போதிலும், சட்ட விதிமுறைகளை மீறி ஆயுதம் பயன்படுத்தியதாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு