தற்போதைய செய்திகள்

மூன்றாவது மாடியில் பற்றிய தீ.. போராடி உயிரிழந்த 2 பெண்கள் - வீட்டின் உள்ளே சிக்கிய 8 பேர் நிலை?

தந்தி டிவி

காஸியாபாத் லோனியில் உள்ள லால்பாக் காலனியில், மூன்று மாடி கட்டிடம் உள்ளது. கட்டிடத்தின் தரைத்தளத்தில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அடித்தளத்தில் கூடாரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் மேல் பகுதியில் சிக்கிய 8 பேரை தீயணைப்பு வீரர்கள், வெளிப்புற படிக்கட்டு மூலம் அடைந்த பிறகு, சுவரை உடைத்து மீட்டனர். பல மணி நேர போராட்டத்திற்குப்பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்தில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், டென்ட் கடை உரிமையாளர் சதீஷ் என்பவரது தாயார் பர்தோ தேவி மற்றும் அவரது சகோதரி மம்தா ஆகியோர் உயிரிழந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்