தற்போதைய செய்திகள்

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அழகி போட்டியில் பரபரப்பு.. "என் பொண்டாட்டிக்கு 2ம் இடமா?" - மேடை ஏறி சம்பவம் செய்த கணவன்

தந்தி டிவி

அழகிப் போட்டியில் தன் மனைவிக்கு 2ம் இடம் கிடைத்ததால் ஆத்திரத்தில் கணவன் முதலிடம் பிடித்தவரின் மகுடத்தைத் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

பிரேசிலில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது... "Miss Gay Mato Grosso 2023" எனப்படும் இந்தப் போட்டியில், வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். நத்தலி பெக்கர் மற்றும் இமானுவெல்லி பெலினி ஆகிய இருவரில் யார் மகுடத்தை சூடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த சமயத்தில், பெலினி வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்... அவருக்கு ஜொலிக்கும் மகுடம் சூடப்பட்டது... இதை 2ம் இடம் பிடித்த நத்தலி கூட ஆட்சேபிக்கவில்லை... ஆனால், "எப்படி என் மனைவிக்கு 2ம் இடம் தருவீர்கள்?" என ஆத்திரம் அடைந்த நத்தலியின் கணவர், மேடையேறி வந்து பெலினிக்கு சூட்டப்பட்ட வெற்றி மகுடத்தைப் பறித்து அடித்து உடைத்து துண்டு துண்டாக நொறுக்கினார்... இதனால் அங்கிருந்தவர்கள் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டனர். இந்த பரபரப்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன... உலகிலேயே தன் மனைவி மட்டும் தான் அழகு என அந்த கணவர் நினைத்தது ஒரு புறம் இருந்தாலும், வெற்றியாளரின் மகுடத்தைப் பறித்து சேதப்படுத்தியது மிகப்பெரிய தவறு என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர்...

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்