தற்போதைய செய்திகள்

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்... அதிரடி உத்தரவு போட்ட தமிழக அரசு

தந்தி டிவி

தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய கட்டண விகிதங்களை நிர்ணயத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கல்வி உரிமைச் சட்டப்படி எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தனியார் பள்ளிகளுக்கு, 2026 ஆம் ஆண்டு வரை கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, கடந்த கல்வி ஆண்டை காட்டிலும் கட்டண விகிதத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 12 ஆயிரத்து 76 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், புதிய கட்டண விகிதப்படி12 ஆயிரத்து 659 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.6 முதல் எட்டாம் வகுப்பு வரை பழைய கட்டணம் 15 ஆயிரத்து 711 ரூபாய் ஆக இருந்த நிலையில், புதிய கட்டணம் 16 ஆயிரத்து 477 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்