தற்போதைய செய்திகள்

புது பைக்கில் கோளாறு.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.. ஓனருக்கு அடிச்ச ஜாக்பாட்

தந்தி டிவி

சென்னை படப்பை பகுதியைச் சேர்ந்த அனிதா மேரி என்ற பெண், கடந்த 2019ம் ஆண்டு சுமார் 80 ஆயிரம் மதிப்பில் புதிய பைக் வாங்கியுள்ளார். இருசக்கர வாகனம் வாங்கிய 3 மாதத்தில் பிரேக் டிஸ்க் பழுதானதால், சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரிசெய்துள்ளார். ஆனால், அடுத்தடுத்து 3 முறைக்கு மேல் பிரேக் டிஸ்க் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு வாகனத்தை விற்பனை செய்த ஷோரூம், சர்வீஸ் சென்டர் மற்றும் வாகனத்தின் தொழிற்சாலை இணைந்து வாகனத்தின் முழு தொகையான 80 ஆயிரம் ரூபாயும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் வழக்கு செலவாக 15 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக ஒரு லட்சத்து 95 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.

High Court | Chennai FootBall | கால்பந்து சங்கத்துக்கான தேர்தல்.. நிறுத்திவைக்க ஹைகோர்ட் உத்தரவு

Student ``மரணம் எப்படி எல்லாம் வருது’’ - உடைந்து நொறுங்கிய பள்ளி வேன்.. துள்ளத்துடிக்க பலியான கோரம்

PM Modi | Central Govt | மத்திய அமைச்சக செயலாளர்களுடன், பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை

CM Vijay Order | அதிகாரிகளுக்கு ஸ்ட்ரிக்டாக உத்தரவு - CM விஜய் அதிரடி

High Court | Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? ஹைகோர்ட் அதிரடி உத்தரவு