தற்போதைய செய்திகள்

பிளாஸ்டிக் பை-க்காக கத்தியால் குத்தி தலையை சுக்குநூறாக்கி கொன்ற கொடூரன்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, முன்விரோதம் காரணமாக, நபரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, காவல்நிலையத்தில் விவசாயி சரண் அடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

சூளகிரி பகுதியை சேர்ந்த அப்பையப்பா என்பவருக்கும், கிருஷ்ணப்பா என்பவருக்கும் இடையே, விளைநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் திருடுபோனது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்காக கிருஷ்ணப்பாவை பழி தீர்க்க அப்பையப்பா திட்டம் தீட்டியுள்ளார்.

அப்போது, தெருக்கூத்து பார்த்திருந்த கிருஷ்ணப்பாவை, தனியாக பேச வேண்டும் என அழைத்துச் சென்ற அப்பையப்பா, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியதுடன், தலையில் கல்லைப் போட்டக் கொலை செய்தார்.

தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இதனை அறிந்த அப்பையப்பா, காவல்நிலையத்தில் சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்