தற்போதைய செய்திகள்

"பிரபல பாடகருக்கு பிரபல நடிகர் கொலை மிரட்டல்.." - சென்னை இசை நிகழ்ச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் பி.ஆர்.கிருஷ்ணா. திரைத்துறை பாடகரான இவர், சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது தொடர்பான அவரது புகார் மனுவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அங்கு சக நடிகர்களுடன் இருந்த ஈஸ்வர் ரகுநாதன், தன்னை அங்கிருந்து வெளியேறும்படி வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அங்கிருந்து கிளம்பவில்லை எனில் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் தனக்கும் எவ்வித முன்விரோதமும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை திவ்யா - அர்னவ் பிரச்சினையிலும் ஈஸ்வர் ரகுநாதனின் பெயர் அடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு