தற்போதைய செய்திகள்

பெண்ணின் அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு - மதுரை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..!

தந்தி டிவி

மதுரை மேலூர் முகம்மதியாபுரம் பகுதியை சேர்ந்த ஆஷிசாபானு என்பவர், பிரசவத்திற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்தது. ஆனால், ஆஷிசா பானுவின் சம்மதம் கேட்காமலேயே, அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள், அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மருத்துவமனை தலைவரிடம் புகார் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர், ஆசிபா பானுவின் கருக்குழாயில் நீர்க்கோர்த்து இருந்த காரணத்தினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதி, இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்ததாக தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்