தற்போதைய செய்திகள்

போனில் ஆபாச படம் இருப்பதாக கூறி இளைஞரை கதற விட்ட போலி போலீஸ்... தெரிந்துவிட்டதோ என நம்பிய இளைஞர்..

தந்தி டிவி

சென்னை, எம்.கே.பி நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, இளைஞரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தன்னை போலீசார் என கூறி அறிமுகமாகி உள்ளார். இளைஞரின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறி அவரது செல்போனை வாங்கிய நபர், செல்போனை சோதனை செய்வது போல நாடகமாடி, பணம் கொடுத்தால் விட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து, அருகில் இருந்த ஏடிஎம்மில் இரண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து இளைஞர் கொடுத்த நிலையி, நபர் தப்பிச் சென்றிருக்கிறார். இது குறித்து இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி மூலம், இளைஞரிடம் மோசடி செய்தது கொடுங்கையூரை சேர்ந்த அசாருதின் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அசாருதினை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி