தற்போதைய செய்திகள்

"Police -ஆ இல்லை Polic -ஆ"... கடையில் புகுந்து சோதனை நடத்திய நபர் - ID கார்டு -ஆல் சிக்கிய பரிதாபம்

தந்தி டிவி

மதுரை மேலூர் அடுத்த மேலவளவை சேர்ந்தவர் சரவணன். இவர், நத்தம் அடுத்த செந்துறையிலுள்ள கடைகளில் மதுவிலக்கு போலீசார் என கூறி கடைகளில் சோதனை நடத்தியுள்ளார். கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்வதாக கூறி கடை உரிமையாளர்களிடம் பணம் கேட்டிருக்கிறார். இதில், சந்தேகமடைந்த கடை உரிமையாளர்கள், அவரிடம் அடையாள அட்டை கேட்கவே, போலியாக தயாரித்து வைத்திருந்த அடையாள அட்டையை சரவணன் காண்பித்துள்ளார். அடையாள அட்டையில் எழுத்துப் பிழைகள் இருந்ததால், சந்தேகத்தை உறுதி செய்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரவணனை பிடித்து நடத்திய விசாரணையில், அவர் போலீஸ் வேடத்தில் மோசடி செய்ய முயன்றது தெரியவர, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்