தற்போதைய செய்திகள்

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி | Vellore | Chennai |

தந்தி டிவி

வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு கடந்த சில வாரங்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் ஐஏஎஸ் அதிகாரி சிவக்குமார் பேசுவதாக ஒருவர் பேசி வந்துள்ளார்.

தங்களின் மீது புகார்கள் வந்துள்ளது. நீங்கள் சென்னையில் வந்து தன்னை சந்திக்க வேண்டும் என சிலரை மிரட்டியும் உள்ளார். சந்தேகம் அடைந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது, அதுபோன்று யாரும் சென்னை தலைமை செயலகத்தில் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன் வேலூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிவக்குமார் என்பவர் செல்போனை போலீசார் டிராக் செய்தனர். அதில் செல்போனில் பேசும் நபர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. அவரை அங்கேயே வைத்து கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்