தற்போதைய செய்திகள்

"என்னை பாலியல் வன்கொடுமை செய்து கோணிப்பையில் கட்டி வீசினர்" - பெண் பொய் புகார்.. திடுக்கிடும் தகவல்

தந்தி டிவி

உத்தரப்பிரதேசத்தில் டெல்லி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த‌தாக பொய் புகார் அளித்த‌தாக, அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திர பிரதேசம் காஸியாபாத்தில் டெல்லியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவரை கடந்த 18ஆம் தேதி 5 பேர் கடத்தி கூட்டு பாலியல் செய்துவிட்டு, கோணிப்பையில் கட்டி வீசிவிட்டு சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். குடும்ப சொத்து தகராறு காரணமாக, அவர்களை சிக்க வைக்க திட்டமிட்டு பொய் புகார் அளித்த‌தாக தெரிவித்துள்ள போலீசார், அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். அதே நேரத்தில், அந்த பெண்ணின் உடலில் காயங்களும், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி இருந்த‌தாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து விசாரிக்க வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு டெல்லி பெண்கள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதனால், உடனடியாக உயர்மட்ட ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆணையம், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்