தற்போதைய செய்திகள்

அரசு வேலைக்காக போலி சாதிச்சான்று... "இட ஒதுக்கீட்டை துஷ்பிரயோகம் செய்பவர்கள்... - உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து

தந்தி டிவி
• கோவையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர், பழங்குடியினர் என சாதிச்சான்று அளித்து, கடந்த 1982-ம் ஆண்டு கோவை வன மரபியல் நிறுவனத்தில் அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். • கடந்த 1999ம் ஆண்டு இளநிலை எழுத்தராக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அவரது சாதிச்சான்று மாநில அளவிலான ஆய்வுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. • இதனிடையே, பாலசுந்தரத்தின் சகோதரரும், சகோதரியும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனக் கண்டறிந்த மாநில அளவிலான குழு, அவரது பழங்குடியினர் சாதி சான்றிதழை கடந்த 2022ம் ஆண்டு மாதம் ரத்து செய்தது. • இதன் காரணமாக அவரது ஓய்வு கால பலன்களும் நிறுத்தப்பட்டன. • இந்த நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட சாதிச்சான்றை, தற்போது ஆய்வு செய்து ரத்து செய்தது சட்டபூர்வமானதல்ல எனக் கூறி, பாலசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். • இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு வேலைக்காக இட ஒதுக்கீட்டு கொள்கையை துஷ்பிரயோகம் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் விடக்கூடாது எனக் கூறி, பாலசுந்தரத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்