தற்போதைய செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் உச்சகட்ட விபரீதம்.. மாணவன் நீரில் மூழ்கிய பதறவைக்கும் காட்சி.. "டேய்.. டேய்.. மச்சான்.." - என கதறிய நண்பர்கள்

தந்தி டிவி

செம்பரம்பாக்கம் ஏரியில் நீச்சல் தெரியாமல் நண்பர்களுடன் குளித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன், கோவூர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தனது நண்பர்களான சூர்யா மற்றும் யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

நீச்சல் தெரியாத அவர், ஏரிக்கரையில் உள்ள படியில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தார்.

அவரது நண்பர் சூர்யா நீச்சல் அடித்தபடி குளித்து கொண்டிருந்த போது, ஜெகதீசனை நீச்சல் அடிக்கும்படி ஏரியில் இறக்கியுள்ளார்.

இதை யுவராஜ் வீடியோ எடுக்கையில், நீச்சல் தெரியாத ஜெகதீசன் ஏரியில் மூழ்கி உயிரிழக்கும் காட்சிகளும் தெரியாமல் பதிவாகியுள்ளன.

இது குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து நீரில் மூழ்கிய ஜெகதீசனை இறந்த நிலையில் மீட்டனர்

 நீச்சல் தெரியாமல் ஏரியில் மூழ்கி ஜெகதீசன் இறந்து போன காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்