தற்போதைய செய்திகள்

பாஜக நிர்வாகி வீட்டில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் - கிடுகிடுத்த கும்பகோணம்

தந்தி டிவி

கும்பகோணம் அருகே பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் வீட்டில், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன். பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக உள்ள இவர், 10ஆயிரம் சதுர அடி நிலத்தை இலவசமாக எழுதி தரக்கூறி, சிவகுமார் என்பவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகாரளிக்கப்பட்ட நிலையில், கார்த்திகேயன் தலைமறைவானார். இந்தநிலையில் கார்த்திகேயனின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், வெடிபொருட்கள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததோடு, கார்த்திகேயனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்