தற்போதைய செய்திகள்

எம்.டி, சி.இ.ஓ-வை வெட்டி சாய்த்த Ex Employee - காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்

தந்தி டிவி

பெங்களூருவில் ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகியோரை முன்னாள் ஊழியர் ஒருவரால் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெலிக்ஸ் என்ற ஊழியர், அந்நிறுவனத்தில் இருந்து விலகிய பின்னர் தனியாக தொழில் தொடங்கினார். ஆனால் பெலிக்ஸ்க்கு கிடைக்க வேண்டிய பல ஆர்டர்கள் ஏரோ நீஸ் நிறுவனத்திற்கு சென்றதால் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து நிர்வாக இயக்குநர் ஃபனீந்திர சுப்ரமணியம், தலைமை நிர்வாக அதிகாரி வினு குமாரை சந்தித்து பேசிய, பெலிக்ஸ், மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பெங்களூரூ போலீசார் தலைமறைவான பெலிக்ஸ்- ஐ தேடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்