தற்போதைய செய்திகள்

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது விவகாரம் - டெல்லி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

தந்தி டிவி

மதுபான கொள்கை முறைகேடு புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மதுபான கொள்கை முறைகேடு புகார் வழக்கில் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த 27-ஆம் தேதி கைது செய்தது. இதைத்தொடர்ந்து அவரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கே.நாக்பால் முன் கடந்த 28 - ஆம் தேதி ஆஜர்படுத்தியது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்று 5 நாள் வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில் இன்று அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு, மேலும் மூன்று நாள் காவலை நீட்டிக்க கோரிக்கை விடுத்தது. இதற்கு மணீஷ் சிசோடியா சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனிடைய ஜாமின் கோரிய மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 10 ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்