தற்போதைய செய்திகள்

வலியால் துடி துடித்த தாய்... பார்த்து செய்வதறியாது மனமுடைந்த மகன் - இருவரும் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி
• கோபிசெட்டிபாளையம் அருகே செல்லப்பா நகரைச் சேர்ந்த கணவரை இழந்த சம்பூரணத்திற்கு உதயகுமார், நந்தகுமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்... • உதயகுமார் அளுக்குளியில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில், லாரி ஓட்டுநராகப் பணியாற்றும் நந்த குமாருக்குத் திருமணம் ஆகவில்லை... • அவர் தாய் சம்பூரணத்துடன் வசித்து வந்துள்ளார்... • சம்பூரணம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது 2 மாதங்களுக்கு முன்பு தெரிய வந்த நிலையில், பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வந்துள்ளது... • தாயின் வலியைக் காணமுடியாமல் தவித்த நந்தகுமார், மன வேதனையில் இருந்துள்ளார்... • நேற்று காலை உதயகுமார் தாயைப் பார்க்க வீட்டிற்கு வந்த விட்டு இரவு கிளம்ப முற்பட்டுள்ளார்... • ஆனால் நந்தகுமார் அவரைக் கட்டாயப்படுத்தி இருக்க வைத்தார் நந்த குமார்... • தொடர்ந்து இன்று காலை உதயகுமார் மனைவி சாந்தி சமையல் செய்ய எழுந்து சம்பூரணத்தையும் நந்தகுமாரையும் எழுப்பிய போது தான் இருவரும் மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்