தற்போதைய செய்திகள்

எந்த சின்னம் யாருக்கு ? சூடு பிடித்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. வேட்புமனு வாபஸ் பெற கெடு அறிவிப்பு

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன. காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் உள்பட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களும் இந்த களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

வேட்புமனுவை வாபஸ் பெற இன்று மாலை 3 மணிவரை காலக்கெடு உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்கள் கிடைக்கும். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய உள்ளது.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்கள் விரும்பும் சின்னங்கள் ஒதுக்கப்படும்.

ஒருவருக்கு மேல் ஒரே சின்னத்தை கேட்டு இருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்