தற்போதைய செய்திகள்

குழந்தை பிறந்தநாளுக்கு வாங்கிய கேக்.. கேக்கை வெட்டிய போது அதிர்ச்சி... வாட்ஸ் ஆப்பில் பிரபல பேக்கரி மீது புகார்

தந்தி டிவி
• கோபிசெட்டிப்பாளையத்தில் குழந்தையின் பிறந்தநாளுக்காக வாங்கிச் சென்ற கேக், கெட்டுப்போனதாக புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • கோபிச்செட்டிபாளையம் அருகே அவ்வையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். • இவர் தனது குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, கோபி அண்ணா பாலம் அருகேயுள்ள பிரபல பேக்கரியில் 750 ரூபாய் மதிப்புள்ள கேக் ஒன்றை வாங்கிச் சென்றுள்ளார். • இதையடுத்து, கேக்கை வெட்டி பாதி சாப்பிட்ட நிலையில் அது கெட்டுபோனது எனத் தெரிய வந்துள்ளது. • கெட்டுப்போன கேக்கை புகைப்படம் எடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகாரளித்துள்ளார். • இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் கேட்ட போது அவர் வாங்கிச் சென்ற கேக் கெட்டுப் போனது எனவும், கேக் வாங்கிய ரசீது பெற்ற பின் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்