தற்போதைய செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நிறைவு

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தயார் செய்து வருகிறது.

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 408 வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூருவில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சரி செய்யும் பணியில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட்ட பின்பு இன்று தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கிழக்கு சட்டமன்ற தேர்தலில் 286 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 286 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 310 சரிபார்ப்பு இயந்திரங்களும் என 882 இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்