சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேர்-குடியாத்தம் சாலையில் கடந்த 2 நாட்களாக காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி வருகின்றன. இந்த யானைகள் சாலையில் வெகுநேரமாக நிற்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியும், மீண்டும் மீண்டும் யானைகள் சாலைக்கு வந்துவிடுகின்றன. இதனையடுத்து கும்கி யானைகளை கொண்டு காட்டு யானைகளை விரட்ட வனத்துறை முடிவு செய்துள்ளது.